இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விபரித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் பேசிய அவர், அமெரிக்க டொலரின் மதிப்பில் ஏற்பட்ட சமீபத்திய ஏற்ற இறக்கங்கள், உலகளாவிய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணிக்கான அதிகரித்த தேவை ஆகியவற்றால் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

குறுகிய காலத்திற்கு டொலரானது தற்காலிக அதிகரிப்பைச் சந்தித்ததாகவும், இது சுமார் ஒரு வார காலம், நாணய மாற்று விகித அதிகரிப்புக்கு வழிவகுத்ததாகவும் அவர் விளக்கினார்.

இருப்பினும், நிலைமையை திறம்பட நிர்வகிக்க அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி, சுற்றுலா வருமானம் மற்றும் தொழிலாளர்களின் பணப் பரிமாற்றங்கள் மூலம் இலங்கை தொடர்ந்து போதுமான அந்நியச் செலாவணி வரவைப் பெற்று வருவதாகவும், இது நாட்டின் அந்நிய செலாவணி ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க உதவுவதாகவும் டொக்டர் பெர்னாண்டோ கூறினார்.

மேலும் நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட சமீபத்திய நகர்வு, எந்தவொரு அடிப்படை பொருளாதார ஸ்திரத்தன்மை அல்லது நெருக்கடியின் விளைவாக அன்றி, இயல்பான சந்தை இயக்கத்தின் விளைவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here