நாட்டிலுள்ள 12 சதவீதமான முதியவர்கள் அனைத்தை பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.இதனை உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார்.
பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும் வாழ்நாள் முழுவதும் வாய் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம் எனவும் நாட்டில் இன்று ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் அவசியம் என ரமேஷ் பத்திரன வலியுறுத்தியுள்ளார்.