ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கான பிரச்சாரங்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாத ஆரம்பத்திலிருந்து இதனை ஆரம்பிக்க வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, 9 மாகாணங்கள் மற்றும் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதான கூட்டங்களை நடாத்துவதற்கும் பிரதேச மட்டத்தில் வீடு வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள் குழுவொன்றுக்கு தனியாக பிரசாரப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
