வீண் விரயம் மற்றும் ஊழல் அற்ற மக்கள் நலன் சார்ந்த சுகாதார சேவையை உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான இலங்கையின் முயற்சிகளை வரவேற்பதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இசோமாடா (Akio Isomata) இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுகாதார சேவையில் ஜப்பானின் ஆதரவின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் ஆரம்பச் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.