நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலொன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த மார்க்கத்தின் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, தற்போது ரயிலின் தடம்புரள்வை சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Post Views: 2