நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் முஹம்மட் ரிஷ்வான் 90 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி சார்பாக பெற்றனர்.
பந்து வீச்சில் மட் ஹென்றி மற்றும் லக்கி ஃபெர்கசன் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
நியூசிலாந்து அணி சார்பாக ட்ரைல் மிட்சல் 72 ஓட்டங்களையும், க்ளன் பிலிப்ஸ் 70 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.
இந்த வெற்றியுடன் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக ட்ரைல் மிட்சல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.