இலங்கையின் வெளிநாட்டு நடப்புக் கணக்கு, தொடர்ச்சியாக நான்கு மாத பற்றாக்குறைக்குப் பின்னர், 2026 ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் மிகை நிலையை வெளிப்படுத்துவதாக  இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் நடப்புக் கணக்கு 133 மில்லியன் அமெரிக்க டொலர் மிகையை பதிவு செய்துள்ளது, இது நாட்டின் வெளிநாட்டுத் துறையின் செயல்திறனில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் தொடர்ந்து வலுவான ஆதரவை வழங்கி வருகின்றன நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு மதிப்பீட்டின் படி 10% அதிகரித்து குறித்த தொகை 749 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேநேரம் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பும் 2026 ஓகஸ்ட் இறுதிக்குள் 6.9 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், எரிபொருள் இறக்குமதி செலவு தொடர்ச்சியாக நான்காவது மாதமாகவும் குறைந்துள்ளது, இது சரக்கு இறக்குமதியின் அழுத்தத்தைக் குறைக்க உதவியுள்ளது.

எனினும், சுற்றுலாத்துறை ஆண்டுக்கு ஆண்டு வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது, சுற்றுலாப் பயணிகளின் வருகை 2025 ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.3% குறைந்துள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, இலங்கை ரூபாவும் அழுத்தத்தின் கீழ் இருந்தது எனவும் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக 6.3% மதிப்பிழந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் 2026 ஓகஸ்ட் மாதத்திற்கான CBSL இன் வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here