Tamil News Channel

நான் இன்று இப்படி இருக்க இவர் தான் காரணம்! பாடகி சைந்தவியின் எமோஷனல் பேச்சு..!

sai2

 பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா நிகழ்ச்சியில் பாடகி சைந்தவி தனது தந்தை பற்றி எமோஷனலாக பேசி இருந்தது ரசிகர்களை கண்கலங்க வைத்தது.

சரிகமப நிகழ்ச்சியில் டெடிகேஷன் ரவுண்டில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பாடல்களை டெடிகேஷன் செய்து பாடினர்.

அப்போது போட்டியாளர்களின் நெகழ்ச்சியான தருணங்களை பார்த்து கண்கலங்கிய சைந்தவியிடம், வி.ஜே அர்ச்சனா, உங்களுடைய அப்பா உங்களுக்கு எவ்வளவு சப்போர்ட்டா இருப்பாங்க என்று கேட்க, சைந்தவி மேலும் எமோஷனலாகி, ”நான் இன்று இவ்வளவு வளர்ந்தற்கு முக்கிய காரணமே என்னுடைய அப்பா தான்.

சின்ன சின்ன விஷயத்திற்கும் அப்பா என்னை மோட்டிவேஷன் செய்து கொண்டே இருப்பார். நான் ஒவ்வொரு விஷயங்கள் செய்யும்போது எது சரி எது தவறு என்று என்னை வழிநடத்துவது அவர்தான்” என்று கண்கலங்கிய படி சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது சர்பிரைஸாக நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்குள் சைந்தவி அப்பா வந்தார். அப்பாவை பார்த்த சைந்தவி உடனே ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்து அழுதார். அப்போது பேசிய சைந்தவி அப்பா, ”என்னுடைய மகள் தான் என்னுடைய வீட்டின் தேவதை.

அவளுக்காக நான் எதை வேண்டும் என்றாலும் செய்வேன். அவளுடைய சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம். அவள் சின்ன சின்ன ஈவண்டில் கலந்து கொள்ளும் போதும் நான் அவளை உற்சாகப்படுத்துவேன்” என்று பேசினார். இந்த சம்பவத்தின் போது அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்ணீரால் மிதந்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts