முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் களுத்துறையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உணர்ச்சிவசப்பட்டார்.
கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த அபேகுணவர்தன, “நான் மக்களுக்காக உழைத்தேன்” என ஆவேசமாக தெரிவித்தார்.
அவர் தனது உரையில், எதிர்க்கட்சி எம்.பி.யாக பணியாற்ற விருப்பம் தெரிவித்தார், பதவியைப் பொருட்படுத்தாமல் தனது அரசியல் பயணத்தைத் தொடர உறுதிபடுத்தினார்.