பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அந்தக் கட்சி, இந்த மாதம் 12 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைப்பதே இதன் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் சென்று கூட்டங்களை நடத்துவதற்கான ஜனநாயக உரிமை உள்ளது போல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் அந்த உரிமை இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here