தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நான்கு அல்லது ஐந்து வேட்பாளர்கள் தயாராக உள்ளனர் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒரு பிராந்திய சபைக்கு கூட வேட்பாளர்களை காண முடியாது என்று கூறிய கட்சி இன்று ஜனாதிபதி வேட்பாளர்களை அதிகம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் கட்சியை நம்பி பலர் கட்சியில் இணைந்துள்ளனர் என்றும் இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் பொது வேட்பாளரை முன்னிறுத்த தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்த வேட்பாளர் யார் என்பதை கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.