July 14, 2025
நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தும் குறிப்புக்கள்.!
மருத்துவம்

நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தும் குறிப்புக்கள்.!

May 28, 2024

வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.

* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர, சூரியக் கதிர்களால் எற்படும் கருமை நிறம் மாறும்.

* பூசணிக்காய் சிறு துண்டுகளாக்கி அதை கண்களைச் சுற்றி வைப்பதால், கண்ணை சுற்றி ஏற்படும் கருமை நிறம் மாறும்

* பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர, முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

*  புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி மிதமான சுடுநீரில் கழுவ, முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்தால்  நல்ல பலன் கிடைக்கும்.

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* வெள்ளரிச்சாறு, சந்தனபொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம்  பிரகாசமாக இருக்கும்.

* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை  மறைந்து மிருதுவாக மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *