November 14, 2025
நாளாந்த நீர் தேவையை எப்படி கணிக்கலாம்? டாக்டர் விளக்கும் முக்கிய தகவல்..!
மருத்துவம்

நாளாந்த நீர் தேவையை எப்படி கணிக்கலாம்? டாக்டர் விளக்கும் முக்கிய தகவல்..!

May 5, 2025

மனித உயிர் வாழ நீர் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உடலுறுப்புக்கள் சரியாக எவ்வித இடையூறும் இல்லாமல் செயல்படுவதற்கு நீர் அவசியம்.

இப்படி இருக்கும் பொழுது, ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும்? உடலுக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை எப்படி அறிவது? உள்ளிட்ட பல சந்தேகங்கள் நம்மில் பலருக்கு வரும்.

இப்படியான கேள்விகளுக்கு மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த வகையில், தண்ணீர் எப்படி பருக வேண்டும்? என்பதனை பதிவில் பார்க்கலாம்.

உணவு , காற்று போன்று மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் அவசியம். ஒவ்வொரு செல்களுக்கும் ஊட்டச்சத்தை கொண்டு செல்ல நீர் அவசியமாகிறது.

உண்ணப்பட்ட உணவை செரிமானம் செய்ய வாயில் சுரக்கும் எச்சிலில் இருந்து ஜீரண மண்டலத்தில் சுரக்கப்படும் நொதிகள் வரை நீர் அவசியம் என்பதால் நாளாந்தம் போதியளவு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். மனித உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்களும் நீர் வடிவம் தான்.

கரு உருவாக பெண்ணின் முட்டையில் சேர்க்கை புரிய வேண்டிய விந்து வெளியேறுவதும் நீர் வடிவம் உள்ளிட்ட பல வேலைகளுக்கு நீர் தேவைப்படுகிறது. உணவின்றி முப்பது முதல் நாற்பது நாட்கள் கூட தண்ணீரை மட்டும் அருந்தி (Wet fasting) கொண்டு உயிர் வாழ முடியும்.

உடலில் உள்ள கொழுப்பை எரித்து வாழ உதவிச் செய்யும். அதிகபட்சம் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் ( நூறு மணிநேரங்களுக்குள்) மரணம் ஏற்படும்.

நீர் தேவை அறிவது எப்படி?

மனித உடலில் மூளை தான் பிரத்தியோக மையம் செயல்படுகிறது. இது மனித உடலில் உள்ள நீருக்கும் உப்புக்கும் இடையே சமநிலையை தக்க வைக்கிறது. உடலில் நீர் குறையும் போது உப்பின் அளவு கூடும். அப்போது தாக மையம் உந்தப்பட்டு நீர் அருந்தும் உணர்வு ஏற்படும்.

உடலில் நீர் கூடும் போது சிறுநீரகங்களுக்கு கட்டளை பறந்து சென்று தேவைக்கு மிகுதியாக உள்ள நீர் வெளியேற்றப்படும். எனவே தாகத்துக்கு ஏற்றவாறு நீர் அருந்தவது அவசியம்.

குறைபாட்டின் அறிகுறிகள்

1. மூன்று முதல் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும்.

2. பகலில் விழித்திருக்கும் போது (காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிவரை) ஐந்து முதல் ஆறு தடவை சிறுநீர் கழிப்பது நல்லது.

3. இரவில் ஒரு முறை சிறுநீர் கழிக்க எழுவதும் இயற்கை.

4. ஆறு மணிநேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் இருப்பது நோய்நிலைமை உண்டு பண்ணும்.

5. சரியான கழிப்பறை வசதிகள் போதாமையால், பயணங்களின் போது சிறுநீர் வராமல் இருக்க பெண்கள் நீரை அருந்தாமல் இருப்பார்கள். இப்படி செய்பவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *