தேர்தல் முறைக்கேடுகள் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 11 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 05 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை அறிக்கையிடப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 91 முறைப்பாடுகளும்,  மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்துக்கு 46 முறைப்பாடுகளும் கிடைக்கப்பபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சட்டத்தினை மீறும் பட்சத்திலான முறைப்பாடுகள் 134 ஆக பதிவாகியுள்ளதுடன் வன்முறை சம்பவம் 01ஆகவும் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here