கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு தரப்பிலிருந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாளை சனிக்கிழமை இந்திய நாடு முழுவதிலுமுள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் ( IMA ) நேற்று அறிவித்திருந்தது.
மேலும் இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆகஸ்ட் 17ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 18ஆம் திகதி காலை 6 மணி வரையில், நாடாளாவிய ரீதியில் மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும். அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவுகள் தவிர வேறு எந்த மருத்துவ சேவையும் செயல்படாது. திட்டமிடப்பட்ட சில அறுவை சிகிச்சைகளும் நடத்தப்பட மாட்டாது. ‘மருத்துவர்களுக்கான பாதுகாப்புக்கு அரச அதிகாரிகளே பொறுப்பு’ என குறிப்பிடப்பட்டுள்ளனர்.