கடுகன்னாவ தொடருந்து குறுக்கு வீதியில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நாளை (15) அவ்வீதி மூடப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை (15) காலை 10 மணி முதல் 16 ஆம் திகதி காலை 6.00 மணி வரை இந்த வீதியானது வாகனப் போக்குவரத்துக்காக முற்றிலுமாக மூடப்படும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அசௌகரியத்தை குறைக்கவும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு தொடருந்து திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.