ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான பண்புகள் மற்றும் ஆற்றல்கள் இருக்கும்.
அந்த வகையில், சிலர் நட்புக்கு இலக்கணமாக இருப்பார்கள், உலகில் நண்பர்கள் இல்லாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள், ஆனால் அனைவருக்கும் உண்மையான மற்றும் நேர்மையான நண்பர்கள் கிடைப்பார்களா? என்று கேட்டால் அது நிச்சயம் இல்லாத பதிலாக தான் இருக்கும்.
சில ராசிகளில் பிறந்தவர்கள் நட்பு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்களை விட சிறந்தவர்கள் அவர்களின் நண்பர்கள் என்பார்கள்.
இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால் அவர்கள் நட்பில் கர்ணன் போன்று இருப்பார்கள்.
1. ரிஷபம்
- விசுவாசத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருக்கும் ரிஷப ராசிக்காரர்கள் பணிவான இயல்பு கொண்டவர்கள்.
- மற்றவர்கள் மீது அதிகமாக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
- அவர்கள் ஒருவரை நண்பராகக் கருதினால் அவர்களுக்காக எதையும் செய்வார்கள்.
- மகிழ்ச்சியாக மட்டுமல்லாமல் பக்க பலமாகவும் இருப்பார்கள்.
- பொறுமையுடன் நண்பர்களிடம் பழகுவார்கள்.
- தேவையான நேரத்தில் நண்பர்களுக்கு உதவும் மனிதர்களாக இருப்பார்கள்.
2.கடகம்
- கடக ராசி பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுவார்கள். இவர்களிடம் இருக்கும் இரக்க குணத்தை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
- உணர்ச்சிப்பூர்வமாக என்ன செய்ய வேண்டும் என்பதனை சிந்தித்து செயற்படுவார்கள்.
- தன்னுடைய நண்பருக்காக எதையும் செய்யும் துணிச்சல் இவர்களுக்கு இருக்கும்.
- நண்பர்களை எப்போதும் ஊக்குவிப்பவர்களாக இருப்பார்கள், இதனால் நண்பர்கள் அவர்களை உணர்வுபூர்வமாக மதிப்பார்கள்.
- நண்பர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடி வந்து உதவும் குணம் இவர்களிடம் இயற்கையாகவே இருக்கும்.
3. சிம்மம்
- சிம்ம ராசியில் பிறந்தவர்கள் விசுவாசமானவர்களாக இருப்பார்கள்.
- இவர்களுடன் யாராவது நண்பர்களாகி விட்டால் பாதுகாப்புடன் அரவணைத்து கொள்வார்கள்.
- நண்பர்களுக்கு கஷ்டமான நிலையில் அவர்களுக்கு எப்படி உதவலாம் என கடுமையாக சிந்தித்து கொண்டிருப்பார்கள்.
- மற்றவர்களின் நட்பை தீவிரமாக எடுத்து கொண்டு கடினமான காலங்களில் ஆறுதல் வழங்க நினைப்பார்கள்.
- தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
4. மகரம்
- மகர ராசியில் பிறந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
- எப்போதும் மன உறுதியுடன் நடந்து கொள்ளும் இவர்கள் நண்பர்களுக்காக எதையும் செய்யும் மனப்பாங்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.
- தங்களின் நண்பர்களுக்கு ஆதரவு தேவைப்படும்போது, அவர்கள் கேட்காமல் ஓடி வந்து உதவி செய்வார்கள்.
- அவர்கள் தங்கள் நண்பர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை தங்கள் பொறுப்பாகக் கருதுகிறார்கள். அதனால் தான் அவர்கள் சிறந்த நண்பர்களில் ஒருவராக இருக்கிறார்கள்.