Updated:
நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் தீர்மானம்!
தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்புக்களின் நிதி, சொத்துக்களை முடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவின் கையொப்பத்துடன் இது குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகளுக்கும் அதனுடன் தொடர்புடைய 210 நபர்களுக்கும் எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் நிதி, சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் முடக்கப்படவுள்ளது.
அத்துடன், குறித்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 நபர்களின் நிதிகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐ.நா. சட்டம் மற்றும் 2012 ஆம் ஆண்டின் ஐ.நா. ஆணை இல 01 பிரகாரம் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous article
Latest News
Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win
The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...


