January 13, 2026
நியூசிலாந்து அணியை அறிவித்த இரு சிறுவர்கள்..!
Sports Top Updates புதிய செய்திகள்

நியூசிலாந்து அணியை அறிவித்த இரு சிறுவர்கள்..!

May 1, 2024

எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடரில் விளையாடும் அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

நியூசிலாந்து அணியை இரு சிறுவர்கள் இணைந்து அறிவித்துள்ளமை சிறப்பு அம்சமாகும்.

மாடில்டா என்ற சிறுமியும் அங்கஸ் என்ற சிறுவனும் நியூசிலாந்து கிரிக்கெட் சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அணியை அறிவித்ததுடன், இறுதியில் வாழ்த்துகளையும் கூறியிருந்தனர்.

இரண்டு இளம் பருவத்தினரை நம்பி இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை மிகவும் விசேடமானது என பலரும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த ஆண்டு இடம்பெற்ற ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்கான அணியை அறிவிக்கும் போதும் நியூசிலாந்து கிரிக்கெட் சபை வித்தியாசமான உத்தியை கையாண்டிருந்தது.

வீரர்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *