நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன.
இதில் முதலாவது போட்டியில் சிம்பாப்வே அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியிருந்தது.
இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது.
மற்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 38 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பாக லச்லன் ஸ்டக்பொலே 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் அரஃபாத் மின்ஹாஸ் மற்றும் உபைத் ஷா ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களையும் நவீத் அஹமெட் கான் 2 விக்கட்டுக்களையும் பாகிஸ்தான் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 25.2 ஓவரில் விக்கட்டிழப்பின்றி 144 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஷாசைப் கான் 80 ஓட்டங்களையும், ஷமைல் ஹுசைன் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஷாசைப் கான் தெரிவாகியிருந்தார்.