July 8, 2025
நிர்வாக உத்தியோகத்தரின் வீட்டில் பொருட்களை திருடிய பெண் கைது !
Top Updates புதிய செய்திகள்

நிர்வாக உத்தியோகத்தரின் வீட்டில் பொருட்களை திருடிய பெண் கைது !

May 8, 2024

தனியார் நிறுவனமொன்றின் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரின் வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிய இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நிர்வாக உத்தியோகத்தர் வீட்டிலிருந்து சுமார்  10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவர்   ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை இவர் மற்றுமொரு இளைஞனுடன் இணைந்தே நிர்வாக  உத்தியோகத்தர்  வீட்டிற்குள் ஜன்னல் வழியாக நுழைந்து இந்த பொருட்களைத் திருடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதேச  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *