Tamil News Channel

நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

jpe

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக் கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியுள்ளது.

இதில் 31, டிசம்பர் 2021இல் கிட்டத்தட்ட 5,000 வழக்குகள் முன்னெடுக்கப்பட முடியாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் நிறுவனங்கள் செயல்படாமை அல்லது நிறுவனங்கள் பணிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றமை.

நிறுவனங்கள் முழுமையாக நாட்டைவிட்டு வெளியேறுதல் போன்ற காரணிகள் வழக்குகள் தேக்கமடைவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

இதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊழியர் சேம இலாப நிதிக் கட்டமைப்புக்களுக்கு குறித்த நிதியைச் செலுத்துவதற்கு தவறிய உரிமையாளர்கள் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுக்கணக்குகளுக்கான குழு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts