நிறுவன பராமரிப்பு மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கான உதவித் தொகை திட்டம் நாளை ஆரம்பம் – அமைச்சர் சரோஜா சாவித்ரி!

0
17

நிறுவன பராமரிப்பில் உள்ள, பாதுகாவலர்களின் கீழ் வாழும் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்காக மாதாந்தம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் ஜூலை 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அறிவித்துள்ளார்.

இத்திட்டம் நாட்டின் 306 குழந்தை அபிவிருத்தி நிலையங்களில் வசிக்கும் 9,191 குழந்தைகளுக்கு பயனளிக்கவுள்ளதாகவும், இதற்காக ரூ.1,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உதவித் தொகையின் கீழ் ரூ.3,000 பராமரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மீதமுள்ள ரூ.2,000 குழந்தையின் பெயரில் ‘அர்த’ எனப்படும் கணக்கில் சேமிக்கப்படும். 18 வயது பூர்த்தியாகும் போது அந்த தொகை குழந்தையின் எதிர்காலத்துக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி பணம் அவர்களது கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here