கடந்த இரு தினங்களாக தொடர்ந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பானது இன்று (15) காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படுமென சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன அறிவித்ததையடுத்து குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதாரத்துடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவைகளை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.