நீங்கள் Iphone யூஸரா.! உங்கள் மொபைல் அதிக வெப்பமடையாமல் பார்த்துக் கொள்ள உதவும் டிப்ஸ்!!!
ஒவ்வொரு வருடமும் கோடை காலம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரண கொடூரமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் கோடை காலம் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலம் மனிதர்களை மட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்களுக்கும் தொல்லையாகவே அமைகிறது.
அந்த வகையில் பலர் ஐபோன்கள் கோடை வெயில் காரணமாக அதிக வெப்பமடைவதாக குறை கூறி வருகின்றனர். இது தொடர்ச்சியாக நீடித்தால் அது உங்களுடைய ஐபோனுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் சாதனத்தை பாதுகாப்பதற்கு நீங்கள் போதுமான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.
உங்க ஐபோனை குளுமையான இடத்தில் வைக்கவும்:
நேரடி சூரிய வெளிச்சம் படாத வகையில் உங்களுடைய ஐபோன் சாதனத்தை வைப்பது நீங்கள் பின்பற்ற வேண்டிய முதல் படியாகும். கோடைக்கால வெப்பம் மிகவும் மோசமானதாக இருக்கலாம். இதனால் உங்களுடைய ஐஃபோனுக்கு நிரந்தர சேதம் உண்டாக வாய்ப்புள்ளது. ஆகவே உங்களுடைய ஐபோன் வெப்பமாகி விட்டதாக நீங்கள் உணர்ந்தால் அதனை உடனடியாக வீட்டிற்குள் கொண்டு வந்து வழக்கமான வெப்ப நிலையில் வையுங்கள்.
ஐபோன்களை தொடர்ச்சியாக பலமணி நேரங்கள் பயன்படுத்த வேண்டாம். உங்களுடைய ஐபோன் உபயோகத்திற்கு இடையிடையே பிரேக் கொடுப்பதன் மூலமாக அது வழக்கமான வெப்ப நிலைக்கு திரும்புவதை நீங்கள் உறுதி செய்யலாம். பேக்ரவுண்டில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் மூடிவிட்டு உங்களுடைய ஐபோனுக்கு ஓய்வு கொடுங்கள்.
ஏர்பிளேன் மோடை ஆன் செய்யவும்:
உங்களுடைய ஐபோனில் ஏர்பிளேன் மோடை ஸ்விட்ச் ஆன் செய்வது அதனை குளுமைப்படுத்த உதவும். குறிப்பாக குறைந்த சிக்னல் கொண்ட பகுதியில் ஐபோனை பயன்படுத்தும் பொழுது இதனை நீங்கள் செய்ய வேண்டும். ஏர்பிளேன் மோடுகளை ஸ்விட்ச் ஆன் செய்வது சாதனத்தை குளுமைப்படுத்த மட்டும் அல்லாமல் அதன் பேட்டரி ஆயுட்காலத்தையும் மேம்படுத்த உதவும்.
பொதுவாக நமது ஐபோன்களை பாதுகாக்கவும், அதனை ஸ்டைலாக காட்டிக் கொள்ளவும் பெரும்பாலான யூசர்கள் பேக் கேஸ் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை குறிப்பாக வெப்ப கடத்தா பொருட்களால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தை சாதனத்திலிருந்து வெளியேற்ற அனுமதிக்காது. ஒருவேளை உங்களுடைய ஐபோன் அளவுக்கு அதிகமாக வெப்பம் ஆகிவிட்டால் உடனடியாக பேக் கேசை அவிழ்த்து வெப்பத்தை வெளியேற்ற அனுமதியுங்கள்.
வழக்கமான முறையில் உங்களுடைய ஐபோனை நீங்கள் அப்டேட் செய்யும் பொழுது அதில் அதிகப்படியான வெப்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. அதன் ஒவ்வொரு புதிய iOS பதிப்பிலும் ஆப்பிள் மிகப்பெரிய அப்டேட்டுகளை வெளியிடுவது வழக்கம். ஆகவே உங்கள் சாதனம் எந்த ஒரு தடையும் இல்லாமல் சீராக இயங்குவதற்கும், குறைந்தபட்ச ஆற்றலை பயன்படுத்துவதற்கும் அதனை வழக்கமான முறையில் அப்டேட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
![]()