July 14, 2025
நீடிக்கப்படுமா ஜனாதிபதியின் பதவிக் காலம்..!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

நீடிக்கப்படுமா ஜனாதிபதியின் பதவிக் காலம்..!

Jun 8, 2024

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்படுமாயின், பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தையும் அதற்கேற்ப இரண்டு வருடங்கள் நீடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அவ்வாறான உடன்படிக்கையை மேற்கொண்டால், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கை ஓங்குவார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாத தொடக்கத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்  நாடாளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் அதிக அளவில் உள்ளதால் அவர்களின் ஓய்வூதியத்தை இழப்பதை தவிர்க்க அவர்களின் பதவிக்காலத்தை மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *