கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைகளை இன்று (19) மேற்கொள்ளுமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் சீராக்கல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.