வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பாக பண மோசடி குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வவுனியா நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (28) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வெளிநாடு செல்வதற்கு சிலர் குறித்த நபர் ஊடாக வேறொரு நபருக்கு பணம் கொடுத்துள்ளனர்.
பணத்தை பெற்றுக் கொண்டவர் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமையால், குறித்த நபருக்கு எதிராக பணம் கொடுத்தவர்கள் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.
நெஞ்சுவலி என கூறி நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார்.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.