November 18, 2025
நீதிமன்ற வளாகத்தில் வழக்குச் சான்றுப் பொருட்கள் அகற்றும் கடைசி தேதி அறிவிப்பு..!!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் வழக்குச் சான்றுப் பொருட்கள் அகற்றும் கடைசி தேதி அறிவிப்பு..!!

Oct 18, 2025

நீதிமன்ற வளாகத்தில் குவிந்து கிடக்கும் வழக்கின் சான்றுப் பொருட்களை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அகற்ற வேண்டும் என்று நீதிச் சேவை ஆணைக்குழு சுற்றுநிருபம் ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதன் சிரேஸ்ட உதவிச் செயலாளர் டி.எம்.ஜே. திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த சுற்றுநிருபத்தில் அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அனைத்து நீதித்துறை அதிகாரிகளுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (18) முதல் டிசம்பர் 31 வரை, வார இறுதி நாட்களிலோ அல்லது பொது விடுமுறை நாட்களிலோ, மீண்டும் நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறாமல் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்தப் பணியில் ஈடுபடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, மேல் நீதிமன்றத்தின் வழக்கு பொருள் உள்ள அறையை அல்லது காப்பகத்தைத் திறப்பது மேல் நீதிமன்ற நீதிபதியால் நியமிக்கப்படும் பொருத்தமான அதிகாரியின் நேரடி மேற்பார்வையின் கீழ் செய்யப்பட வேண்டும், மாவட்ட நீதவான் நீதிமன்றம் அல்லது நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு பொருள் அறை அல்லது காப்பகத்தைத் மாவட்ட நீதிபதி, நீதவான், மேலதிக மாவட்ட நீதவான் அல்லது மேலதிக நீதவான் ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இடம்பெற வேண்டும்.

அத்துடன் நீதித்துறை அலுவலகத்தைத் திறப்பது பதிவாளர் அல்லது பிரதி பதிவாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் செய்யப்பட வேண்டும் என்று நீதிச் சேவை ஆணைக்குழு வௌியிட்டுள்ள சுற்றறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *