February 11, 2026
நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள்!
புதிய செய்திகள்

நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள்!

Jun 10, 2025

அனுராதபுரம், மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகிலுள்ள குளியல் தளத்தில் குளித்துக் கொண்டிருந்த 54 வயது பெண்ணொருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகளால் நேற்று (09) மாலை மீட்கப்பட்டார்.

நேற்று (09) மாலை அந்தப் பெண் இந்த விபத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது பணியில் இருந்த உயிர்காக்கும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மிகுந்த முயற்சியுடன் அவரை மீட்டு அடிப்படை சிகிச்சை அளித்தனர்.

பாதிக்கப்பட்டவர் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார்.

அந்தப் பெண் மீட்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு அடிப்படை முதலுதவி அளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *