இனிவரும் காலங்களில்  நுகர்வோருக்கு நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிகாலத்தை கருத்திற்கொண்டு  நீர் விரயத்தை குறைப்பதற்கான தொடர் வழிகாட்டல்களை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் ‘தண்ணீர் வழங்கல் வழங்குநர்களுக்கான நீர் வழங்கல் இணைப்பு வழிகாட்டுதல்கள்’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது.

மேலும் தற்போது நிலவும் நிதி நெருக்கடி காரணமாக, அனைத்து பொது சேவை வழங்குநர்களுக்கும் புதிய திட்டங்களில் முதலீடு செய்வது அல்லது வசதிகளை மேம்படுத்துவது சவாலாக உள்ளது என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here