நுவரெலியாவில் முதல் முறையாக மாநகர சபை ஏற்பாட்டில் விசித்திர காற்றாடி திருவிழா இன்று (17.08) ஆரம்பமாகியுள்ளது.
நுவரெலியா கிரகரி வாவி கரையோரத்தில் இடம்பெறும் குறித்த காற்றாடி போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர காற்றாடிகளை செய்து வீரர்கள் பறக்க விடுகின்றனர்.
அழகிய வண்ணங்களில் நுணுக்கமான வடிவமைப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்த மீன்கள், பறவைகள், நட்சத்திரங்கள் போன்ற விசித்திரமான இராட்சத காற்றாடிகள் காண்போரை வியக்க வைத்துள்ளது.
பல்வேறு உருவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட காற்றாடிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு இரசித்து வருகின்றனர்.
மேலும் இன்றும் (17.08) நாளையும் (18.08) நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் விசேட கலாச்சார விளையாட்டு போட்டிகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
குறிப்பாக தற்போது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் கூடுதலான பார்வையாளர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.