மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இவ் விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில்  வேனின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here