சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்குமான நிலையமானது நேற்றைய தினம் (26.06) நெடுந்தீவுப் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடமாடும் சேவையை முன்னெடுத்திருந்தனர்.
நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவை ஊடாக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் மற்றும் இலவச சட்ட ஆலோசனை ஆகியன வழங்கப்பட்டன.
நிகழ்வில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் திருமதி அம்பிகா சிறிதரன் கலந்து கொண்டிருந்தார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2