நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று புதன்கிழமை (06) கையளிக்கப்படவுள்ளது.
17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டங்களில் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான அரிசி ஆலைகளின் உரிமையாளர்களிடம் உள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்பு குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தினர்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பரிசீலித்ததன் பின்னர் ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.