January 20, 2026
நேபாளத்துடன் போராடி வென்றது நெதர்லாந்து…
Sports புதிய செய்திகள்

நேபாளத்துடன் போராடி வென்றது நெதர்லாந்து…

Jun 5, 2024

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்து வரும் நிலையில் நேற்றைய தினம் டெக்சாஸ் டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

நேபாளத்தின் 107 ஓட்டங்களை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று தனது வெற்றியை பதிவு செய்தது.

மெக்ஸ் ஓதௌத் ஆட்டம் இழக்காமல் துடுப்பெடுத்தாடி 54 ஓட்டங்களையும், விக்ரம்ஜித் சிங் 22 ஓட்டங்களையும், சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் 14 ஓட்டங்களையும், மற்றும் பாஸ் டி லீட் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ரோஹித் பவ்டெல் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 35 ஓட்டங்களையும் ,காரண் கே.சி. 17 ஓட்டங்களையும், குல்சான் ஜா 14 ஓட்டங்களையும் மற்றும் அனில் சாஹ் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

மேலும் பந்துவீச்சில் லோகன் வென் பீக் 18 ஓட்டங்களுக்கு 3 விச்கெட்களையும் டிம் ப்றிங்ள் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் போல் வென் மீக்கரன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *