நேபாளம் பயணமாகும் இலங்கை வீராங்கனை ….!
கரவெட்டி பிரதேசத்தில் உள்ள மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் வீராங்கனையும், தேசிய கபடி அணி தெரிவில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் இலங்கை கடற்படை அணி வீராங்கனையுமான பிரியவர்ணா நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் விளையாட்டுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறு வயது முதல் யாழ் / நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகத்திற்காக மாவட்டம், மாகாணம் மற்றும் தேசிய ரீதியான போட்டிகளில் தனது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி இவர் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது இலங்கை அணிக்காக நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் விளையாட பயணமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]()