கென்யா தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 220க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் எம்பகாசி மாவட்டத்தில் எரிவாயுசிலிண்டர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த லொறி வெடித்து சிதறியதிலேயே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள், சேதமடைந்துள்ளதையும் தீவிபத்து பல தொடர்மாடிகளிற்கு பரவியுள்ளதால் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெடிவிபத்துக்கள், தீப்பிளம்புகள், மேலும்  இடம்பெறலாம் என்ற அச்சத்தினால்  பொலிஸார் அந்த பகுதிக்குச் செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here