Tamil News Channel

நோர்வேயில் முன்னாள் காதலனால் கொலை செய்யப்பட்ட யாழ். யுவதி

நோர்வேயில்  பல் மருத்துவராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முன்னாள் காதலனால் நேற்றைய தினம்(09) சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் 30 வயதான வரதராஜன் ராகவி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது முன்னாள் காதலனால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே பொலிஸாரிடம் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார்.

இருப்பினும் நோர்வேயின் Elverum  என்ற இடத்தில் குறித்த பெண்ணை முன்னால் காதலன்  சுட்டுக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்  பெண்ணின் முன்னால் காதலனை நோர்வே பொலிஸார் கைது செய்துதுள்ளதுடன்,  நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts