
பங்களாதேஷில் அதிகரிக்கும் உயிரிழப்பு…!!!
பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்புக்களில் 30 சதவீதம் இட ஒதுக்கீடை வழங்கி வரும் நிலையில், நில ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சி மாணவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதையடுத்து, 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்த போராட்டம் அதிகம் தீவிரமடைந்து டாக்காவில் உள்ள PTV தொலைக்காட்சியின் தலைமைக் காரியாலயத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
இதற்கமைய பலியானவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையறையின்றி மூட உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.