
பங்களாதேஷில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான அறிவித்தல் வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு…!
பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக பங்களாதேஷில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்படாத காரணத்தினால் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கி இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.