பங்களாதேசில் தலைநகர் டாக்காவில் உள்ள ஏழுமாடிகளை கொண்ட கச்சிபாய் உணவு விடுதியொன்றில் வேகமாக பரவிய தீ விபத்தில் 40ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 75கற்கும் அதிகமானவர்கள் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயைகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன் டாக்கா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிறுவர்கள் உட்பட 33 பேரின் உடல்கள் உள்ளதாகவும் மற்றுமொரு மருத்துவமனையில் பத்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 20கற்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எரிவாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளதால்
அந்த கட்டிடம் மிகவும் ஆபத்தானதாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.