அப்பிளை தினமும் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். சிவப்பு ஆப்பிளை போல பச்சை ஆப்பிளை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.
கண்களின் ஆரோக்கியம்:
பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் ஏ கண் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். கண்களின் வறட்சி, கண்களின் பலவீனம் ஆகியவை சரி செய்யும். நீரிழிவு நோய்க்கு நல்லது : பச்சை ஆப்பிளில் சர்க்கரை குறைவு மேலும், நார்சத்துக்கள் போதுமான அளவு உள்ளதால் நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தரும்.
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது : பச்சை ஆப்பிளில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நமது நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.
எலும்பு வலிமை : பச்சை ஆப்பிளில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும். தினமும் பச்சை ஆப்பிளை சாப்பிட்டால் எலும்புகள் பலம் பெறும்.
சரும ஆரோக்கியம்: பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவும்.