Tamil News Channel

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய ரோயல் சேலெஞர்ஸ் பெங்களூரு..!

ipl தொடரின் நேற்றைய போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ் (Punjab kings) மற்றும் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு(Royal challengers bengluru) அணி களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் (Punjab kings) அணி  20 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பஞ்சாப் கிங்ஸ் (Punjab kings) அணி சார்பில் ஷிகர் தவான்(Shikhar Dhawan) 45  ஓட்டங்களையும் ஜிதேஷ் சர்மா (Jitesh Sharma) 27 ஓட்டங்களையும் பிரப்சிம்ரன் சிங் (Prabhsimran Singh) 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப்பெற்றனர்.

பந்துவீச்சில் முகமது சிராஜ் Mohammed Siraj) மற்றும் கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) தலா 02 விக்கெட்டு வீதமும் யாஷ் தயாள்(Yash Dayal 01 விக்கெட்டையும் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) அணி சார்பில் வீழ்த்தினர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) அணி 19.2 ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) அணி சார்பில் விராட் கோலி (Virat Kohli) 77 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் (DineshKarthik)  28 ஓட்டங்களையும் ரஜத் படிதார் (Rajat Patidar) 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப்பெற்றனர்.

பந்துவீச்சில் ஹர்ப்ரீத் ப்ரார் (Harpreet Brar) மற்றும் ககிசோ ரபாடா (Kagiso Rabada ) தலா 02 விக்கெட்டு வீதமும் சாம் கர்ரன் (Sam Curran) 01 விக்கெட்டையும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab kings) அணி சார்பில் வீழ்த்தினர்.

தொடரின் ஆட்டநாயகனாக ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) அணியின் விராட் கோலி (Virat Kohli)  தெரிவானார்.

இன்றைய தினம் குஜராத் ஜெயன்ஸ் Gujarat Giants ) மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai super kings) ஆகிய அணிகள் தற்சமயம் மோதவுள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts