2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(Sunrishers Hyderabad) மற்றும் பஞ்சாப் கிங்ஸ்(Punjab Kings) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 02 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.
ஹைதராபாத் அணி சார்பாக நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy ) 64 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh ) 04 விக்கெட்டுக்களையும் ஹர்ஷல் படேல் (Harshal Patel ) மற்றும் சாம் கர்ரன் (Sam Curran ) தலா 02 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத்தழுவியது.
பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஷஷாங்க் சிங் (Shashank Singh ) 46 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார்(Bhuvneshwar Kumar ) 02 விக்கெட்டுக்களையும் பாட் கம்மின்ஸ் (Pat Cummins ) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy ) தாலா 01 விக்கெட்டு வீதம் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஹைதராபாத் அணி வீரர் நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy ) தெரிவாகியிருந்தார்.