Tamil News Channel

படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி..!

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுற்றுலா அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

காலியில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று பலோவன் முறைப்படி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் Jeffrey Vandersay அதிகூடுதலாக 53 ஓட்டங்களை பெற்றதுடன் ஏனைய அனைத்து வீரர்களும் அதனை விட குறைந்த ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Matthew Kuhnemann மற்றும் Nathan Lyon ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 06 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பின்னர் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி டெஸ்ட் வரலாற்றில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அடைந்த மிகப்பெரிய தோல்வியாக இந்த போட்டி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்ததே மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts