புது குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மன்னகண்டல் பகுதியில் இரவு வேலைகளில் கால்நடைகளில் அடைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பட்டியில் இரவு காவல் கடமைக்காக சென்று இரவு படுத்து உறங்கிய நிலையில் 18.08 காலையில் படுத்துறங்கிய இடத்திலேயே இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இறந்தவர் கந்தையா மோகனதாஸ் எனும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
அத்துடன், இறந்தவரின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், புது குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.