ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
எனினும், ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட வடமத்திய மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நிதி இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களை சேவையில் இணைத்துக்கொள்வதாக இருந்தால், அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர குறிப்பிட்டார்.
குறித்த பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டால், சம்பளக் கொடுப்பனவுகளுக்காக 7000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை தேவைப்படுமென செயலாளர் கூறினார்.