நுவரெலியா – கண்டி பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (11) ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
27,000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் 653 தபால் நிலையங்கள், 3,410 உப தபால் நிலையங்கள் மற்றும் அனைத்து நிர்வாக அலுவலகங்களும் முடங்கும் என்றும் தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.