சமகி ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, கட்சிக்குள் காணப்படும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை முன்னிறுத்தி இன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்றில் உரையாற்றிய போதே தெரிவித்துள்ளார்.
ஊழல் அரசியல்வாதிகள் என முன்னர் முத்திரை குத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது SJB யில் இணைந்து கொண்டதன் மூலம் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அத்துகோரள தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “சஜித் பிரேமதாச தனது சொந்த அரசியல் எதிர்காலத்திற்காக இன்னும் ஐந்து வருடங்கள் பொறுமையாக இருந்திருந்தால், இந்த சவாலை நாங்கள் எதிர்கொண்டிருக்க மாட்டோம். நான் சஜித் பிரேமதாசவிடம் கூறுகின்றேன், உங்களை இந்தப் பாதாளத்திற்குத் தள்ளுபவர்கள், அடுத்த முறை பாராளுமன்றத்திற்குள் நுழையவே விரும்புகிறார்கள், அவர்கள் உங்களை ஜனாதிபதியாக்க விரும்பவில்லை” என்று அத்துகோரள கூறியுள்ளார்.